Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உட்லண்ட்ஸ் வட்டாரவாசிகள் மறுபயனீடு செய்ய புதிய வழி

உட்லண்ட்ஸ் வட்டாரவாசியா நீங்கள்? மறுபயனீடு செய்வது உங்களுக்கு இனி எளிதாகும்.

வாசிப்புநேரம் -

உட்லண்ட்ஸ் வட்டாரவாசியா நீங்கள்? மறுபயனீடு செய்வது உங்களுக்கு இனி எளிதாகும்.

Sembcorp நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய செயலி மூலமாக அது சாத்தியமாகும்.

ezi என்ற அந்தக் கைபேசிச் செயலி மூலம் குடியிருப்பாளர்கள் தாங்கள் மறுபயனீடு செய்ய விரும்பும் பொருள்களை Sembcorp நிறுவனத்திடம் தெரிவிக்கலாம்.

அதைக் கொடுக்க விரும்பும் தேதி, நேரம் ஆகியவற்றையும் செயலியில் குறிப்பிடலாம்.

பதிவு செய்யப்படும் நாளன்று, நிறுவனத்தின் ஊழியர் அதை வீட்டுக்கு வந்து பெற்றுச் செல்வார்.

அதுமட்டுமன்றி, காகிதம், பிளாஸ்டிக், உலோகம் போன்ற பொருள்களை மறுயனீடு செய்ய அவர்களுக்குப் பணமும் கொடுக்கப்படும்.

இந்தப் புதிய சேவையை அடுத்த ஆண்டு இறுதிக்குள் மற்ற வட்டாரங்களிலும் அறிமுகப்படுத்த Sembcorp  நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்