Images
  • AI tool
    (படம்: Facebook/Nanyang Technological University, Singapore)

இதய நோய்களை விரைவாகக் கண்டறிய உதவும் புதிய கருவி

சிங்கப்பூர் ஆய்வாளர்கள், இதய நோய்களைக் கண்டறிவதைத் துரிதப்படுத்தும் புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியை உருவாக்கியுள்ளனர்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி, சிங்கப்பூர் தேசிய இதய நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியில் அது சாத்தியமானது.

அதனைக் கொண்டு, இதய நோய்களைச் சுமார் தொண்ணூற்று ஒன்பது விழுக்காட்டுத் துல்லியத்துடன் கண்டறிய முடியும்.

புதிய கருவி, மருந்தகங்களில் ECG போன்ற முன்னோட்டப் பரிசோதனைகளை நடத்தும்போது நோயை அடையாளம் காண உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அதன் மூலம், இதய நோய்க்கு விரைவாகச் சிகிச்சையளிக்க முடியும். செயற்கை நுண்ணறிவுக் கருவி குறித்து மேலும் சோதனை நடத்த, குழு, உள்ளூர் மருத்துவமனைகளுடன் சேர்ந்து பணியாற்றும்.

மனிதர்களிடம் புதிய கருவியைச் சோதித்துப் பார்க்க, இன்னும் சுமார் ஈராண்டு ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Top