Images
  • Hdb
    படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீட்டுத் திட்டத்தின்கீழ் அடுத்த ஆண்டு 15,000 வீடுகள் விற்பனை

தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீட்டுத் திட்டத்தின்கீழ் அடுத்த ஆண்டு சுமார் 15,000 வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியுள்ளது.

இவ்வாண்டு விற்பனைக்கு விடப்பட்ட 15,800 வீடுகளைக் காட்டிலும் அது குறைவு.

புதிய தெங்கா வட்டாரத்தில் மொத்தம் 2000 வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.

அதன் மூலம் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளுக்கான காத்திருக்கும் நேரம் குறையும் என்று கழகம் குறிப்பிட்டது.

செங்க்காங், ஜூரோங் வெஸ்ட், காலாங் வாம்போ ஆகிய வட்டாரங்களிலும் வீடுகள் விற்பனைக்கு விடப்படும். 

Top