Images
  • New Certification
    (படம்:  Vanessa Lim/ CNA)

எரிசக்திச் செயல்திறனை மதிப்பிட புதிய சான்றிதழ் முறை


பொறியாளர்களின் எரிசக்திச் செயல்திறனை மதிப்பிடும் புதிய சான்றிதழ் திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.

தேசியச் சுற்றுப்புற அமைப்பும் பொறியாளர் கல்விக் கழகமும் இணைந்து அதனை அறிமுகம் செய்தன.

எரிசக்திச் சேமிப்புச் சட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேம்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரிய தொழிற்சாலைகள் வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தைத் தெரிவிப்பது 2021ஆம் ஆண்டிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய சான்றிதழ் மூலம் பொறியாளர்களின் எரிசக்தித் திறனை மதிப்பீடு செய்ய முடியும். அதேநேரம் எரிசக்திச் செயல்திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளைக் கண்டறியவும் புதிய சான்றிதழ் திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.   

Top