Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனையிலிருந்து அனுப்புவதற்கான நடைமுறைகளில் மாற்றம்

COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனையிலிருந்து மீண்டும் வசிப்பிடம் அனுப்புவதற்கான நடைமுறைகளை அதிகாரிகள் திருத்தியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
COVID-19: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனையிலிருந்து அனுப்புவதற்கான நடைமுறைகளில் மாற்றம்

படம்: Sengkang General Hospital

COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனையிலிருந்து மீண்டும் வசிப்பிடம் அனுப்புவதற்கான நடைமுறைகளை அதிகாரிகள் திருத்தியுள்ளனர்.

உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்ட பரிந்துரைகளுக்கு ஏற்ப அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரைக் கால அடிப்படையில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற, உலகச் சுகாதார நிறுவனம் நேற்று பரிந்துரைகளை வெளியிட்டதாகச் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.

இதற்கு முன், கிருமி பரவக்கூடிய சாத்தியத்தின் அடிப்படையில் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் 10 நாள்களுக்குப் பின், மருத்துவமனையிலிருந்து வெளியேறலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைத்ததாகத் திரு. கான் கூறினார்.

அவர்களுக்குச் சுவாசப் பிரச்சினை அல்லது காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என்றால் 3 நாள்களுக்குள் வீடு திரும்பலாம்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் உடல்நலம் 21 ஆவது நாள் சீராக இருந்தால்,அவர்கள் கூடுதல் 'PCR' பரிசோதனையின்றி வசிப்பிடம் திரும்பலாம் என்று அமைச்சர் கான் தெரிவித்தார்.

அவர்கள் 28 ஆவது நாளுக்குப் பின், வேலைக்குச் செல்லலாம் எனவும் கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்