Images
  • Liv@Changi mall
    (படம்: Aqil Haziq Mahmud)

சாங்கியில் அமைந்துள்ள புதிய கடைத்தொகுதி, 38 மில்லியன் வெள்ளிக்கு விற்பனைக்கு விடப்பட்டது

அப்பர் சாங்கி ரோடு நார்த்தில் அமைந்துள்ள புதிய கடைத்தொகுதி, 38 மில்லியன் வெள்ளிக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

2019 டிசம்பரில் Liv@Changi கடைத்தொகுதிக்கு TOP எனும்
தற்காலிக நுழைவு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், நோய்ப்பரவல் சூழலால் அது இன்னும் காலியாக உள்ளது.

சாங்கி சிறைச்சாலைக்கு எதிரே அமைந்துள்ள கடைத்தொகுதியைச் சுற்றிப் பல தனியார் குடியிருப்புப் பேட்டைகள் உள்ளன.

கட்டடத்தின் மேம்பாட்டாளர் Fortune Assets Changi, திட்டக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் கிருமிப்பரவல் சூழல் காரணமாகவும் வாடகைதாரர்களை ஈர்ப்பதில் சிரமத்தை எதிர்நோக்குவதாய்க் கடந்த செப்டம்பரில் தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் நடப்புக்கு வந்த அதிரடித் திட்டத்தினால், சில்லறை விற்பனைக் கடைகளை வாடகைக்கு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

மேலும், காப்பிக் கடைகள், உணவகங்கள் ஆகியவற்றைக் கொண்டுவர, நகரச் சீரமைப்பு ஆணையத்தின் கட்டுப்பாடுகள் தடையாக இருந்ததாய் நிறுவனம் தெரிவித்தது.

அந்த வட்டாரக் குடியிருப்பாளர்கள், புதிய கடைத்தொகுதி திறக்கப்படுவதைப் பெரிதும் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.

பொருள் வாங்க தற்போது லோயாங் வரை செல்ல வேண்டியுள்ளதாக அவர்கள் சுட்டினர். 

Top