Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் கடந்த 2 நாள்களில் உருவான சமூகக் கிருமித்தொற்றுக் குழுமம்

சிங்கப்பூரில் நேற்று 4 பேருக்கு சமூக அளவில் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தகவல் அளித்திருந்தது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நேற்று 4 பேருக்கு சமூக அளவில் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தகவல் அளித்திருந்தது.

அவர்களில் இருவருக்கும் கிருமித்தொற்று உறுதியான சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் இந்தியருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

34 வயது ஆராய்ச்சியாளருக்கு நேற்று முன் தினம் கிருமித்தொற்று உறுதியானது. நேற்று அவரது சகோதரருக்கு கிருமித்தொற்று உறுதியானது.

அவரது சகோதரர் சாங்கி பிசினஸ் பார்க் கிரசண்ட்டில் (Changi Business Park Crescent) உள்ள DBS வங்கியில் பணிபுரிகிறார்.

தேசியப் பல்கலைக்கழகத்தில் அவருடன் பணிபுரிந்த மூத்த ஆராய்ச்சியாளர் ஒருவருக்கும் கிருமித்தொற்று உறுதியானது.

தற்போது, கிருமித்தொற்று குழுமத்தில் மூவர் உள்ளனர்.

அவர்களுடன் சேர்த்து, ஆயுதப்படைவீரர் ஒருவருக்கும் சமூக அளவில் நேற்று கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. 35 வயதான அவர் பகுதி நேர நிழற்படக் கலைஞரும் ஆவார்.

நீ சூன் பயிற்சித் தளத்தில் பயிற்சிக்கு முன் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்குக் கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்