Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: சிங்கப்பூரில் மேலும் 52 பேருக்குக் கிருமித்தொற்று; இருவர் PCF Sparkletots பாலர்பள்ளி குழுமத்தைச் சேர்ந்தவர்கள்

சிங்கப்பூரில் மேலும் 52 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை தீவில் 683 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
COVID-19: சிங்கப்பூரில் மேலும் 52 பேருக்குக் கிருமித்தொற்று; இருவர் PCF Sparkletots பாலர்பள்ளி குழுமத்தைச் சேர்ந்தவர்கள்

(கோப்புப் படம்: Jeremy Long/ CNA)

சிங்கப்பூரில் மேலும் 52 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை தீவில் 683 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று உறுதிசெய்யப்பட்ட சம்பவங்களில் 28 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள், 24 பேர் உள்ளூரில் இருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சு இன்று (மார்ச் 26) தெரிவித்தது.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்தியக் கிழக்கு, ஆசியான், ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளுக்குச் சென்றிருந்தனர். இருவரைத் தவிர மற்றவர்கள் சிங்கப்பூர்வாசிகள் அல்லது நீண்டகால வருகை அனுமதி உள்ளவர்கள்.

நோய்வாய்ப்பட்ட 10 பேர் குழுமங்களுடனும், இதற்கு முன் நோய்வாய்ப்பட்டவர்களுடனும் தொடர்புடையவர்கள்.

14 பேர் குழுமங்களுடனும் நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு இல்லாதவர்கள்.

கிருமித்தொற்று உள்ள இருவர் ஃபெங்ஷானில் உள்ள PCF Sparkletots பாலர்பள்ளி குழுமத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒருவர் Dover Court அனைத்துலகப் பள்ளியுடன் தொடர்புடையவர்.

மேலும் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மொத்தம் 172.

404 பேர் மருந்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்