Images
  • sg skyline
    (கோப்புப் படம்: REUTERS/Edgar Su)

சிங்கப்பூரின் நிதித் துறையில் 6,500 புதிய வேலைகள் உருவாக்கப்படும்

சிங்கப்பூரின் நிதித் துறையில் 6,500 புதிய வேலைகள் இவ்வாண்டு உருவாக்கப்படும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பெரும்பாலான வேலைகள் தொழில்நுட்பம் சார்ந்தவையாக இருக்கும்.

சுமார் 800 நிதித் துறை அமைப்புகளிடம் நடத்திய கருத்தாய்வுக்குப் பின், சிங்கப்பூர் நாணய வாரியமும், வங்கிநிதித் துறைக் கல்வி நிலையமும் அந்த முன்னுரைப்பை வெளியிட்டுள்ளன.

சுமார் 91 விழுக்காட்டு வேலைகள் நிரந்தரமானவை எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம், பயனீட்டாளர் வங்கித் துறையில் பாதிக்கும் மேலான வேலைகள் இருக்கும்.

சொத்து நிர்வாகம், காப்புறுதி போன்ற துறைகளில் எஞ்சிய வேலைகள் உருவாக்கப்படும்.

தற்போது, சிங்கப்பூரின் நிதித் துறையில் பணியாற்றுவோரில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டுமே சிங்கப்பூரர்கள்.

அதனால், நிதித் துறைக்குத் தேவையான தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட சிங்கப்பூர் ஊழியர் அணியை உருவாக்க உதவும்படி நிதி நிறுவனங்களைச் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர் ரவி மேனன் கேட்டுக்கொண்டார். 

Top