Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பெரியளவிலான வேலையிட விபத்துகள்குறித்த அறிக்கைகளைக் கையாள்வதற்குப் புதிய கட்டமைப்பு

பெரியளவிலான வேலையிட விபத்துகள்குறித்த அறிக்கைகளைக் கையாள்வதற்கான புதிய கட்டமைப்பு இன்று நடப்புக்கு வருகிறது.

வாசிப்புநேரம் -
பெரியளவிலான வேலையிட விபத்துகள்குறித்த அறிக்கைகளைக் கையாள்வதற்குப் புதிய கட்டமைப்பு

(படம்: TODAY)

பெரியளவிலான வேலையிட விபத்துகள்குறித்த அறிக்கைகளைக் கையாள்வதற்கான புதிய கட்டமைப்பு இன்று நடப்புக்கு வருகிறது.

புதிய வழிகாட்டிகளின்கீழ் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்துக்கான ஆணையர், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கும்.

அதன்பிறகுதான் சம்பவம் குறித்த அறிக்கையை வெளியிட முடியும்.

சம்பந்தப்பட்ட தரப்புகள் விபத்துக் குறித்த தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.

அதுவும் அறிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படலாம்.

பெரியளவிலான சம்பவங்களிலிருந்து கற்றுக் கொண்டவற்றை முன்கூட்டியே  துறைசார்ந்தவர்களுடன் பகிர்ந்து, அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அந்நடவடிக்கை உதவும்.

எரிசக்தி, ரசாயனத் தொழிலில் குறிப்பிட்ட கருவிகளைச் சோதிக்கும் நடைமுறை மாறுகிறது.

சோதனைக்கான இடைவெளி ஈராண்டுகள் என்ற நிலையிலிருந்து ஐந்தாண்டுகள் என நீட்டிக்கப்படுகிறது.

கருவிகளைப் பராமரிப்பதில் அது நிறுவனங்களுக்கு மேலும் நீக்குப்போக்கை வழங்கும். உற்பத்தித் திறனும் மேம்படும்.

வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மனிதவளத் துணையமைச்சர் ஸாக்கி முகமது வலியுறுத்தினார்.

வேலையிடத்தை எத்தகைய அசம்பாவிதமும் பாதிக்காமல் பார்த்துக்கொள்வதற்குத் துறைசார்ந்தவர்கள் முயற்சிமேற்கொள்ளவேண்டும் என்றார் அவர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்