Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தெம்பனிஸ் சவுத், யீஷூன் வட்டாரங்களில் மறதி நோய் உள்ள மூத்தோருக்காக 2 புதிய தாதிமை இல்லங்கள்

தெம்பனிஸ் சவுத், யீஷூன் வட்டாரங்களில் மறதி நோய் உள்ள மூத்தோருக்காக 2 புதிய தாதிமை இல்லங்கள்

வாசிப்புநேரம் -

தெம்பனிஸ் சவுத், யீஷூன் ஆகிய வட்டாரங்களில் 2024ஆம் ஆண்டுக்குள் மறதி நோய் உள்ள மூத்தோருக்காக 2 புதிய தாதிமை இல்லங்கள் கட்டப்படும்.

கிருமிப்பரவல் சூழலில் அத்தகைய மூத்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால், இந்த ஏற்பாடு.

கடந்த 3 ஆண்டுகளில், தாதிமை இல்லங்களில் சேர்க்கப்பட்ட சுமார் 20 விழுக்காட்டு முதியோருக்கு மறதி நோய்க்கான சிறப்புக் கவனிப்பு தேவைப்பட்டதாகச் சுகாதார அமைச்சின் அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தெம்பனிஸ் வட்டாரத்தில் வரவிருக்கும் 2 தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீட்டுத் திட்டங்களுக்கு நடுவே ஒரு தாதிமை இல்லம் அமைக்கப்படவுள்ளது.

அதில் சுமார் 260 மூத்தோர் வசிப்பர்.

யீஷூன் அவென்யூ 6இல் மற்றோர் இல்லம் அமைக்கப்படும்.

அதில் சுமார் 300 மூத்தோர் வசிப்பதற்கு வசதிகள் இருக்கும்.

அரசாங்கத்தால் கட்டப்படவிருக்கும் அந்த இல்லங்கள், மறதி நோய் உள்ள மூத்தோருக்கு உகந்த இடங்களாக இருக்கும்.

ஓர் அறையில் அதிகபட்சம் 4 படுக்கைகள் இருக்கும்.

வரும் ஆகஸ்ட் மாதத்தில், NTUC சுகாதார அமைப்பின்கீழ் 2 புதிய தாதிமை இல்லங்கள் திறக்கப்படவிருக்கின்றன.

சிங்கப்பூரில் சுமார் 100,000 பேர் முதுமை மறதியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்