Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செங்காங்கில் இம்மாத இறுதிக்குள் இரு புதிய மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளன

சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் வசிப்பவர்களுக்கு, பக்கத்திலேயே பராமரிப்புச் சேவைகளை வழங்க புதிய மருத்துவமனைகள் அடுத்த வாரம் திறக்கப்படவுள்ளன.

வாசிப்புநேரம் -
செங்காங்கில் இம்மாத இறுதிக்குள் இரு புதிய மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளன

படம்: Gwyneth Teo

சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் வசிப்பவர்களுக்கு, பக்கத்திலேயே பராமரிப்புச் சேவைகளை வழங்க புதிய மருத்துவமனைகள் அடுத்த வாரம் திறக்கப்படவுள்ளன.

கட்டம் கட்டமாக திறக்கப்படவுள்ள செங்காங் பொது மருத்துவமனையும் சமூக மருத்துவமனையும் முழுமையாகச் செயல்படும்போது ஏறக்குறைய 9 லட்சம் பேருக்கு அவற்றால் பராமரிப்பு வழங்கமுடியும்.

புதிதாகத் திறக்கப்படவுள்ள இந்த மருத்துவமனைகளில், 1,400 படுக்கைகள் இருக்கும்.

சமூக சுகாதார நாளான இன்று செங்காங் குடியிருப்பளர்கள் மருத்துவமனைகளின் வசதிகளைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றனர்.

அவசர சிகிச்சைகளைக் கவனிக்கும் பொது மருத்துவமனையில் இம்மாதம் 18ஆம் தேதி முதல் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறலாம்.

இம்மாதம் 28ஆம் தேதி திறக்கப்படும் சமூக மருத்துவமனை, முதலில் சாதாரண சிகிச்சைகளையும் மறுவாழ்வுப் பராமரிப்புச் சேவைகளையும் வழங்கும்.

எளிதில் சென்றடையக்கூடிய வகையில் மருத்துவமனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.

செங்காங் ரயில் நிலையம், LRT நிலையம் ஆகியவற்றுடன் இணைந்துள்ள மருத்துவமனைகள் நிபுணத்துவச் சேவைகளையும் வழங்குகின்றன.

பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, மருந்து ஆகிய அனைத்துச் சேவைகளுக்கும ஒரே இடத்தில் கட்டணம் செலுத்தும் வசதி இங்கே இருக்கும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்