Images
  • dbs (1)
    (படம்:  DBS)

சீனப் புத்தாண்டுக்காக நாளை முதல், சிறப்பு POSB தானியக்க வங்கி இயந்திரங்களில் புதிய நோட்டுகள்

சீனப் புத்தாண்டின் போது பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் புதிய நோட்டுகளை நாளை (ஜனவரி 15) முதல் சிங்கப்பூர் முழுவதும் உள்ள சிறப்பு POSB தானியக்க வங்கி இயந்திரங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

DBS வங்கி இன்று (ஜனவரி 14) இதனை அறிவித்தது.

தீவு முழுவதும் நிறுவப்படவிருக்கும் 42 pop-up தானியக்க இயந்திரங்களில் மக்கள் அந்தப் புதிய நோட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு கூடுதலாக 6 pop-up இயந்திரங்கள் அமைக்கப்படுகின்றன.

20 சமூக மன்றங்களில் அந்த இயந்திரங்களைக் காணலாம்.

2 மன்றங்களைத் தவிர மற்றெல்லா இடங்களிலும் மக்கள் எந்த நேரத்திலும் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

சொங் பாங் (Chong Pang), டெக் கீ (Teck Ghee) ஆகிய சமூக மன்றங்களில் இருக்கும் இயந்திரங்கள் காலை 9 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை மட்டுமே செயல்படும்.

சிறப்புத் தேவையுடையோருக்கும் மூத்தோருக்கும் முன்னுரிமை வரிசைகள் இருக்கும்.

வாடிக்கையாளர்கள் தங்களது DBS அல்லது POSB அட்டைகளைப் பயன்படுத்தி அந்த நோட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.


 

Top