Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய NTUC Fairprice குழுமத்தின்கீழ் செயல்படவுள்ள Foodfare, Fairprice, Kopitiam

Foodfare, Fairprice, Kopitiam ஆகியவை இனி புதிய NTUC Fairprice குழுமத்தின்கீழ் செயல்படவுள்ளன.

வாசிப்புநேரம் -
புதிய NTUC Fairprice குழுமத்தின்கீழ் செயல்படவுள்ள Foodfare, Fairprice, Kopitiam

(படம்: FairPrice)

Foodfare, Fairprice, Kopitiam ஆகியவை இனி புதிய NTUC Fairprice குழுமத்தின்கீழ் செயல்படவுள்ளன.

அதன்வழி விலையைக் கட்டுப்படியானதாக வைத்துக்கொள்ளவும் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஈடுகொடுக்கவும் முடியும் என்கிறது குழுமம்.

புதிய மாற்றத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் மேலும் சீரான அனுபவத்தைப் பெறுவதோடு கூடுதல் ஒருங்கிணைப்பைக் காணமுடியும் என்று NTUC Enterpriseஇன் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

NTUC Enterprise நிறுவனம் கடந்த ஆண்டு Kopitiamஐ வாங்கியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

புதிய குழுமத்தின்கீழ், பேரங்காடிகள், உணவங்காடி நிலையங்கள், காப்பிக்கடைகள், மளிகைக் கடைகள் என கிட்டத்தட்ட 600 கடைகள் இயங்கும்.

Foodfare, Kopitiam இவ்விரண்டும் Fairpriceஇடமிருந்து மளிகைப் பொருட்களைப் பெறுவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதற்கான வளங்கள் Fairprice நிறுவனத்திடம் இருப்பதாக சில்லறை விற்பனை நிர்வாக நிபுணர்கள் சுட்டுகின்றனர்.

பொருட்களுக்கான செலவு அந்த மூன்று அமைப்புகளுக்கிடையே பகிர்ந்துகொள்ளப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு விலை கட்டுப்படியானதாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்