Images
  • jurong island plant
    (படம்: Evonik)

ஜூரோங் தீவில் $768 மில்லியன் செலவில் புதிய ஆலை

ஜூரோங் தீவில் 768 மில்லியன் வெள்ளி செலவில் புதிய ஆலை இன்று திறக்கப்பட்டுள்ளது. விலங்குத் தீவனத்தில் சேர்க்கப்படும் methionine எனும் மூலப்பொருளை அந்த ஆலை தயாரிக்கும்.

சிங்கப்பூரில் Evonik Industries நிறுவனத்தின் இரண்டாவது ஆலை அது. புது ஆலை மூலம், ஆசியாவில் அந்நிறுவத்தின் உற்பத்தி அளவு இருமடங்கு ஆகும். அது 150,000 மெட்ரிக் டன்னிலிருந்து சுமார் 300,000 மெட்ரிக் டன்னுக்கு உயரும்.

ஆலையின் திறப்பு நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கலந்துகொண்டார். 2050ஆம் ஆண்டிற்குள் இறைச்சி, கடலுணவு ஆகியவற்றுக்கான தேவை 78 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என்றார் அவர். பருவநிலை மாற்றம் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. அதனை எதிர்கொள்ள புத்தாக்க வழிமுறைகள் தேவைப்படுகின்றன. அதில் ஒன்று methionine போன்ற மூலப்பொருளைத் தயாரிப்பது ஆகும்.

ஆரோக்கியமான புரதச்சத்து உற்பத்திக்கு methionine பயன்படுத்தப்படுகிறது.  

Top