Images
  • school (2)
    (படம்: Facebook/Holy Innocents' Primary School)

பள்ளிகளில் அடுத்த ஆண்டு 43 புதிய தலைமையாசிரியர்கள்

சிங்கப்பூர் பள்ளிகளில் அடுத்த ஆண்டு 43 பேர் புதிய தலைமையாசிரியர்களாகப் நியமிக்கப்படுவர்.

அவர்களில் 23 பேர் தலைமை ஆசிரியர் பொறுப்புக்குப் புதிதாக நியமிக்கப்படுகின்றனர்.

தற்போது இருக்கும் பள்ளிகளிலிருந்து மாறி, வேறு பள்ளிகளுக்குச் சென்று தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் சிறந்த அணுகுமுறை நடப்பில் இருப்பதை கல்வி அமைச்சு சுட்டியது.


கல்வி அமைச்சின் வருடாந்தர பதவியேற்பு நிகழ்ச்சி டிசம்பர் 29ஆம் தேதி இடம்பெறவுள்ளது.

அதில் கல்வியமைச்சர் லாரண்ஸ் வோங் கலந்துகொள்ளவிருக்கிறார்.

ஓய்வுபெறும் தலைமை ஆசிரியர்களும், கல்வியமைச்சு தலைமையகத்தில் அதிகாரிகளாக இருந்து தலைமை ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்களும் நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்படுவர்.  

Top