Images
  • private parking
    படம்:  AFP / ROSLAN RAHMAN

தனியார் வாகன நிறுத்துமிடங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய தரநிலைகள்

நிலப் போக்குவரத்து ஆணையம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து, தனியார் வாகன நிறுத்துமிடங்களுக்கான புதிய  தரநிலைகளை நடைமுறைப்படுத்தவிருக்கிறது.

தனியார் சொத்து மேம்பாட்டு நிறுவனங்கள் அவற்றின் வாகன நிறுத்துமிட எண்ணிக்கையை மேம்பட்ட முறையில் கையாள அது வகைசெய்யும்.

குறிப்பாக, பொதுப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட வட்டாரங்களில் அமையும் தனியார் வாகன நிறுத்துமிடங்கள் அதனால் பயனடையும்.

தனியார் குடியிருப்புகள் எந்தெந்த வகையான வாகன நிறுத்துமிடங்களை அமைக்கலாம் என்று புதிய தரநிலைக் குறிப்புகள் தெளிவுபடுத்தும்.

வெவ்வேறு வட்டாரங்களில், நிலப் பயன்பாட்டின் அடிப்படையில் அவை மாறுபட்டிருக்கும்.

குடியிருப்புகள் அல்லாத மற்றக் கட்டடங்களில், குறைந்தது 5 விழுக்காட்டு வாகன நிறுத்துமிடங்களை, மோட்டார் சைக்கிள்களுக்கு ஒதுக்குவது கட்டாயமாக்கப்படும்.

விதிமுறைகளை மீறும் சொத்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.


Top