Images
  • lta
    (படம்:Land Transport Authority)

புதிய பொங்கோல் இணைப்புப் பாதை இம்மாதம் 25ஆம் தேதி திறக்கப்படும்

பொங்கோல் செண்ட்ரல் வட்டாரத்தை, காலாங்–பயா லேபார் விரைவுச்சாலை,தம்பனீஸ் விரைவுச்சாலை ஆகியவற்றுடன் இணைக்கும் புதிய பாதையை, இம்மாதம் 25ஆம் தேதியிலிருந்து வாகனமோட்டிகள் பயன்படுத்தலாம்.

KPE-TPE முனையத்தின் 2-கட்ட விரிவாகப் பணிகளின் ஒரு பகுதியாக அந்தப் புதிய இணைப்புப் பாதை திறக்கப்படுகிறது.

திட்டமிட்டதற்கு ஓராண்டு முன்பாகவே அது திறக்கப்படுகிறது.
பொங்கோல் செண்ட்ரலுக்கும், காலாங் பயா லேபார் விரைவுச்சாலைக்குமிடையே இரண்டு தடங்களைக் கொண்ட பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.


பொங்கோல் செண்ட்ரலையும் தம்பனீஸ் விரைவுச்சாலையையும் ஒற்றைத் தடம்-மட்டும் கொண்ட பாதை இணைக்கிறது.

காலாங்–பயா லேபார் விரைவுச்சாலையிலிருந்து, பொங்கோல் ரோட்டைப் பயன்படுத்தாமலே புதிய இணைப்புப் பாதை மூலம் பொங்கோல் செண்ட்ரலை அடையலாம்.

அந்த வட்டாரத்தில் தற்போது புழக்கத்தில் இருக்கும் இணைப்புப் பாதைகள், புதிய பாதை திறந்த பிறகு, நவம்பர் 25ஆம் தேதி மாலை 4 மணிக்கு மூடப்படும்.

Top