Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

New World கேளிக்கைப் பூங்காவின் நினைவலைகள்

சிங்கப்பூரில் முதலில் தொடங்கப்பட்ட பிரபலமான கேளிக்கைப் பூங்காக்களில் ஒன்று நியூ வோர்ல்ட் பூங்கா.

வாசிப்புநேரம் -
New World கேளிக்கைப் பூங்காவின் நினைவலைகள்

படம்: நித்திஷ் செந்தூர்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில் முதலில் தொடங்கப்பட்ட பிரபலமான கேளிக்கைப் பூங்காக்களில் ஒன்று நியூ வோர்ல்ட் பூங்கா.

1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் தேதி, நியூ வோர்ல்ட் பூங்கா சேவையைத் தொடங்கியது.

ஓங் பூன் டாட்டும் அவரது தம்பி ஓங் பேங் ஹோக்கும் இணைந்து அந்தக் கேளிக்கைப் பூங்காவை, ஜாலான் புசாரில் நிறுவினர்.

அங்கு திறந்தவெளித் திரையரங்கு மக்களிடையே பிரபலமாக இருந்தது. 

1950கள் வரை அவை பொழுதுபோக்கிற்குப் பிரபலமாக விளங்கின.

1960களில் கேளிக்கைப் பூங்காவின் புகழ் மங்கத் தொடங்கியது. வானொலிப் பெட்டிகளின் விலை குறைந்தது, தொலைக்காட்சி பார்க்கும் வசதி உருவானது, கடைத்தொகுதிகள் அறிமுகமானது ஆகியவை அதற்குக் காரணம்.

1987ஆம் ஆண்டு ஏப்ரலில், நியூ வோர்ல்ட் கேளிக்கைப் பூங்கா அதன் கதவுகளை மூடியது.

நான்கு ஹெக்டர் நிலப்பரப்பில் கேளிக்கைப் பூங்கா அமைந்திருந்த இடத்தை City Developments Limited நிறுவனம் வாங்கியது.

தற்போது அந்த இடத்தில் City Square Residences கட்டடமும் City Square Mall கடைத்தொகுதியும் அமைந்துள்ளன.

மூலம்:தேசிய நூலக வாரியம்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்