Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'சிங்கப்பூரில் இடைவழியாகத் தங்கிவிட்டுத் தென் கொரியா சென்ற பயணிக்கு, இங்கிருந்தபோது கிருமித்தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை'

சிங்கப்பூரில் இடைவழியாகத் தங்கிவிட்டுத் தென் கொரியா சென்ற பயணிக்கு, இங்கிருந்தபோது கிருமித்தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வாசிப்புநேரம் -
'சிங்கப்பூரில் இடைவழியாகத் தங்கிவிட்டுத் தென் கொரியா சென்ற பயணிக்கு, இங்கிருந்தபோது கிருமித்தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை'

கோப்புப் படம்: Jeremy Long

சிங்கப்பூரில் இடைவழியாகத் தங்கிவிட்டுத் தென் கொரியா சென்ற பயணிக்கு, இங்கிருந்தபோது கிருமித்தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அது தெரியவந்ததாகச் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையமும் தெரிவித்தன.

பயணி சிங்கப்பூரில் 24 மணி நேரத்துக்கும் குறைவாகத் தங்கியிருந்தார்.

உலகச் சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, நோய் அறிகுறிகள் தோன்றுவதற்குச் சராசரியாக ஐந்தாறு நாட்கள் எடுக்கும் என்றும் அவை குறிப்பிட்டன.

அந்தப் பயணிக்கு, இங்கிருந்தபோது கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக நியூசிலந்து சுகாதார அமைச்சு கூறியிருந்தது.

இம்மாதம் 21ஆம் தேதி நியூஸிலந்திலிருந்து கிளம்பிய பயணி, மறுநாள் தென் கொரியாவை அடைந்தார்.

அவர் தென் கொரியாவை அடைந்த 4 மணி நேரத்தில் polymerase chain reaction எனப்படும் கிருமித்தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிக்குக் கிருமித்தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சிங்கப்பூரில் தொடர்புத் தடங்களை அறியும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்