Images
  • food centre 1
    படம்: Channel NewsAsia 

நியூட்டன் உணவு நிலையம் மீண்டும் திறப்பு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

நியூட்டன் உணவு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீச்சம்பவத்திற்குப் பிறகு, அங்குள்ள கடைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

தீச்சம்பவத்தால், அங்கு மின்தடை ஏற்பட்டிருந்தது.

நேற்றிரவு 10 மணிக்கு மின்சார விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியதாக உணவு நிலையத்தை நிர்வகிக்கும் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

அடுத்த சில நாட்களுக்கு மின்சார ஊழியர் ஒருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருப்பார் என்றும் அது குறிப்பிட்டது.


Top