Images
  • Ng Chee Meng Retirement
    (படம்: Darius Boey/ CNA)

50க்கும் அதிகமான நிறுவனங்களில் ஓய்வுபெறும் வயது, மீண்டும் வேலைக்கு அமர்த்தும் வயது உயர்த்தப்பட்டுள்ளது


சிங்கப்பூரில் 50க்கும் அதிகமான நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும், அவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தும் வயதையும் சுயமாகவே உயர்த்தியிருக்கின்றன.

தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் (Ng Chee Meng) அதனைத் தெரிவித்தார்.

ஓய்வுபெறும் வயதையும், ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தும் வயதையும் உயர்த்துமாறு நிறுவனங்களை ஊக்குவித்து வந்துள்ளதாக அவர் கூறினார்.

அதற்கு நிறுவனங்களும் நல்ல முறையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதை அவர் பாராட்டினார்.

நிறுவனங்களின் முயற்சிகளை ஊழியர்களும் வரவேற்பதாகத் திரு. இங் சொன்னார்.

தொழிற்சங்கங்களைக் கொண்டுள்ள சுமார் 20 நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியிருக்கின்றன.

அல்லது ஓய்வுபெறும் வயதை வகுக்கவில்லை என தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கடந்த மாதம் தெரிவித்தது.

ஓய்வுபெறும் வயதை 62க்கு அப்பாலும், ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தும் வயதை 67க்கு அப்பாலும் உயர்த்துவது குறித்து முத்தரப்புப் பணிக் குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அது குறித்து அரசாங்கம், நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணக்கம் கண்டுள்ளதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ முன்னர் தெரிவித்திருந்தார்.

அடுத்த மாதத்துக்குள் அதன் தொடர்பில் புதிய அறிவிப்பு ஒன்று செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். 

Top