Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கண்ணைக் கவரும் பல வண்ணச் சன்னல்கள். கட்டடத்தின் வரலாறு தெரியுமா?

ஹில் ஸ்டிரீட்டில் பல வண்ணச் சன்னல்கள் கொண்ட கட்டடத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம். 25,000 சதுரமீட்டர் பரப்பளவில், 6 தளங்களைக் கொண்ட கட்டத்தில், தற்போது தொடர்பு, தகவல் அமைச்சு செயல்படுகிறது.

வாசிப்புநேரம் -

18 டிசம்பர் 1998

ஹில் ஸ்டிரீட்டில் பல வண்ணச் சன்னல்கள் கொண்ட கட்டடத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம். 25,000 சதுரமீட்டர் பரப்பளவில், 6 தளங்களைக் கொண்ட கட்டத்தில், தற்போது தொடர்பு, தகவல் அமைச்சு செயல்படுகிறது.

அது ஒரு காலத்தில் காவல்துறை நிலையமாக இருந்தது.

1935இல், அதிகரித்துவந்த சீன ரகசியக் கும்பல்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் காவல்துறை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

அதில் ஒன்று ஹீல் ஸ்டிரீட் காவல்துறை நிலையம்.

காவல்துறை அதிகாரிகளுக்கான தங்கும்வசதி கொண்ட முதல் சில நிலையங்களில் அதுவும் ஒன்று.

1980ஆம் ஆண்டு கட்டடம் மறுசீரமைக்கப்பட்டது. பணிகளுக்குப் பிறகு, அது, பொதுத்துறை அதிகாரிகளுக்கும் கலாசார அமைச்சின் சில பிரிவுகளுக்கும் அலுவலகமாகச் செயல்பட்டது; ஹில் ஸ்டிரீட் கட்டடம் என்ற பெயர் மாற்றமும் கண்டது.

1998ஆம் ஆண்டு இன்றைய தினம், கட்டடம் தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகாரம் பெற்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்