Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Citibank வங்கியை ஏமாற்றிய நைஜீரிய ஆடவருக்குச் சிறை

பல மில்லியன் டாலர் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதன் தொடர்பில் ஒரு நைஜீரிய ஆடவருக்கு சிங்கப்பூரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Citibank வங்கியை ஏமாற்றிய நைஜீரிய ஆடவருக்குச் சிறை

படம்: Paul Gabriel Amos/Facebook

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

பல மில்லியன் டாலர் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதன் தொடர்பில் ஒரு நைஜீரிய ஆடவருக்கு சிங்கப்பூரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் சிட்டியில் Citibank வங்கியை ஏமாற்றிய அவருக்குக் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதற்காகவும் இதர குற்றங்களுக்காகவும் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டன.

அவருக்கு மூவாண்டுச் சிறைத் தண்டனையும் 4,200 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன.

47 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசியான அமோஸ் பால் கேப்ரியல் உரிமமின்றி வாகனமோட்டியதை ஒப்புக்கொண்டார்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது தொடர்பான அந்த வழக்கு 2009ஆம் ஆண்டு பெரிதாகப் பேசப்பட்டது.

Citibank வங்கியில் National Bank of Ethiopia கணக்கிலிருந்து திருட முயற்சி செய்ததன் தொடர்பில் நியூயார்க்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

2008ஆம் ஆண்டு அமோசும் அவரது நண்பர்களும் எத்தியோப்பியாவின் மத்திய வங்கி அதிகாரிகளைப் போலவே கையெழுத்திட்டு ஆவணங்களைச் சமர்ப்பித்தனர்.

அதனையடுத்து Citibank வங்கியும் பல்வேறு கணக்குகளுக்கு 27.2 மில்லியன் டாலரை மாற்றிவிட்டது.

அதன்பிறகுதான் அமோசின் ஏமாற்றுவேலை தெரியவந்தது. சம்பவம் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்