Images
  • singapore people walking
    (கோப்புப் படம்: AFP/Roslan Rahman)  

இரவு நேர இசை- மதுக்கூடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றால் பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் கட்டாயம்

இரவு நேர இசை- மதுக்கூடங்களில், பிரியாவிடை நிகழ்ச்சிகள் நடந்தால் அப்போதும் பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது கட்டாயம்.

சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம், Enterprise சிங்கப்பூர் அமைப்பு, சிங்கப்பூர்க் காவல்துறை மூன்றும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

இரவுநேர இசை-மதுக்கூடங்களில், அது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைக் கண்காணிக்க, அரசாங்க அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

250 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படவேண்டும்.

அதற்கும் குறைவானவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், பங்கேற்பாளர்களிடையே, ஒரு மீட்டர் இடைவெளி இருப்பது அவசியம்.

மது அருந்திவிட்டு வாகனத்தைச் செலுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கத் தீவு முழுவதும் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருப்பர்.

சிங்கப்பூரில் நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை, மதுபானக் கூடம், இரவு விடுதி, நடனக்கூடம், திரையரங்கு, இசைக்கூடம் போன்ற கேளிக்கை இடங்கள் மூடப்படும். 

Top