Images
  • Nike
    படங்கள் : பொன் மகாலிங்கம்

Nike-இன் 'சும்மா செஞ்சு முடி'- மொழிபெயர்ப்பு குறித்து உங்கள் கருத்து?

பிரபல விளையாட்டுப் பொருள்கள், ஆடைகள் தயாரிக்கும் நிறுவனமான Nike, தற்போது ஒரு புது முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்தில் இன்று ஜுவல் கடைத்தொகுதி பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது. அதில் Nike-யின் கடையும் உள்ளது.

அந்தக் கடையில் விற்கப்படும் சட்டைகளில் வாடிக்கையாளர்கள் " Just do it " எனும் Nike-இன் விற்பனை முழக்கத்தை ஆங்கிலத்துடன் சேர்த்து தமிழ், சீனம், மலாய் என நான்கு மொழிகளில் அச்சடித்துக் கொள்ளலாம்.

சட்டையின் விலை 45 வெள்ளி அதில் 'சும்மா செஞ்சு முடி' என்ற வாக்கியத்தைச் சேர்க்க விரும்பினால் கடைக்குள் இருக்கும் அச்சகத்தில் 10 வெள்ளி கொடுத்து அச்சடித்துக் கொள்ளலாம்.

"Just do it" வாக்கியம் "'சும்மா செஞ்சு முடி" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அது குறித்து இணையவாசிகள் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்து? வேறு சொற்கள் அதற்குப் பொருத்தமாக இருந்திருக்குமா?கருத்துக்களை எங்கள் Facebook பக்கத்தில் தெரிவிக்கலாம்.


 

Top