Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மாணவர்கள் பற்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ளக் கொண்டுவரப்பட்ட திட்டம்

சிங்கப்பூரில் பல ஆண்டுகளுக்கு முன் தொடக்கப்பள்ளி இடைவேளையின்போது மாணவர்கள் பல் துலக்கும் திட்டம் நடைமுறையில் இருந்தது.

வாசிப்புநேரம் -

17 டிசம்பர் 1968


சிங்கப்பூரில் பல ஆண்டுகளுக்கு முன் தொடக்கப்பள்ளி இடைவேளையின்போது மாணவர்கள் பல் துலக்கும் திட்டம் நடைமுறையில் இருந்தது.

1969இல் கிட்டத்தட்ட 250,000 மாணவர்களிடம் பல்துலக்கி இல்லை என்றும், பெரும்பாலோருக்கு அதை முறையாகப் பயன்படுத்தத் தெரியாது என்றும் கூறப்பட்டது.

தேசிய சேவையின்போது நடத்தப்படும் பல் சுகாதாரச் சோதனையில் பற்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

பல் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

அதன் ஓர் அங்கமாக, 1968ஆம் ஆண்டு இன்றைய தினம் பள்ளி மாணவர்களுக்கான பல் சுகாதாரச் சிறப்புத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது.

10 காசுக்குப் பல்துலக்கி, 15 காசுக்குக் குவளை- இவை இரண்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

ஓராண்டில் 439 தொடக்கப்பள்ளிகளில் இருந்த 367,000 மாணவர்கள் திட்டத்தின் வழி பலனடைந்தனர்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்