Images
  • ninaivil nindrathu

தென்னந்தோப்புக்கு நடுவே தொடங்கப்பட்டு, தலைவர்களை உருவாக்கிய பள்ளி

தெலோக் குராவ் சாலையில் தென்னந்தோப்புக்கு நடுவே தொடங்கப்பட்ட பள்ளி நாளடைவில் பெருந்தலைவர்களை உருவாக்கியது.

1926ஆம் ஆண்டு 12 சிறுவர்களின் கல்விப் பயணம் தெலோக் குராவ் தொடக்கப்பள்ளியில் தொடங்கியது.

மரக் கட்டைகளால் அமைக்கப்பட்ட, எளிமையான சூழல் கொண்ட அந்தப் பள்ளி நாளடைவில் பல மேம்பாடுகளைக் கண்டது.

2001ஆம் ஆண்டு அது 50 பிடோக் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள புதிய கட்டடத்துக்கு இடம் மாறியது.

2002ஆம் ஆண்டு இன்றைய தினம் புதிய கட்டடத்தின் அதிகாரபூர்வ திறப்புவிழா நடைபெற்றது.

சிங்கப்பூரோடு சேர்ந்து வளர்ச்சி கண்ட பள்ளியில் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவும் ஒரு மாணவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Top