Images
  • ninaivil nindrathu

41 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான ஈரடுக்குப் பேருந்துகள்

13 ஜூன் 1977

சிங்கப்பூரின் பொதுப்போக்குவரத்துத் தேவைகளுக்கு ஈடுகொடுக்க செய்யப்பட்ட மாற்றங்களில் ஒன்று, ஈரடுக்குப் பேருந்துகள்.

1977ஆம் ஆண்டு இன்றைய தினம் முதல், ஈரடுக்குப் பேருந்துகள் செயல்படத் தொடங்கின.

தேம்பனீஸ் வேயில் அதிகாரபூர்வத் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து பேருந்துச்சேவை எண் 86, முதல் பயணத்தைக் காலை 11.30மணிக்குத் தொடங்கியது. அந்தச் சேவை ஷெண்ட்டன் வேயில் முடிந்தது.

வித்தியாசமான அந்தப் பேருந்தைக் காண மக்கள் கூட்டம் திரண்டதாம்!

ஆனால் அதில் பயணம் செய்யப் பலர் தயக்கம் காட்டியதாகக் கூறப்பட்டது.

உங்கள் கருத்து

Top