Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடையாள அட்டையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்ட நாள்

சிங்கப்பூரில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட முதல் ஆண்டில் சுமார் 8,300 பேர் அது தொலைந்துபோனதாகப் புகார் அளித்தனர்.

வாசிப்புநேரம் -

11 ஜுலை 1967

சிங்கப்பூரில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட முதல் ஆண்டில் சுமார் 8,300 பேர் அது தொலைந்துபோனதாகப் புகார் அளித்தனர்.

அவை காணமற்போனதற்குப் பெரும்பாலும் கவனக்குறைவே காரணம் என்று சொல்லப்பட்டது.

1967ஆம் ஆண்டு இன்றைய தினம் அடையாள அட்டைகளின் முக்கியத்துவம் பற்றி அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது. பிளாஸ்டிக் பொருத்தப்பட்ட அடையாள அட்டைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படியும் அதில் உள்ள எண்ணை மனப்பாடம் செய்துகொள்ளும்படியும் அரசாங்கம் அறிவுறுத்தியது.

எதிர்காலத்தில் அடையாள அட்டைகளின் பயன்பாடு விரிவுப்படுத்தப்படும்;. எனவே அதைத் தொலைத்தால் மற்றொன்றைப் பெறுவது மிகக் கடினம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்