Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசியப் பொது வாக்கெடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள்

தேசியப் பொது வாக்கெடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள்

வாசிப்புநேரம் -

13 ஜூலை 1962

தேசியப் பொது வாக்கெடுப்புச் சட்டம் குறித்து, சட்டமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 1962-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6-ஆம் தேதி, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதே ஆண்டு இன்றைய தினம், தேசியப் பொது வாக்கெடுப்புச் சட்டம் நடப்புக்கு வந்தது.

சிங்கப்பூர் சுதந்திரம் பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவோடு இணைவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அதன் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்த சட்டம் வகைசெய்தது.
அது தொடர்பான இரண்டு வாரக் கடும் பிரச்சாரத்துக்குப் பிறகு, 1962-ஆம் ஆண்டு, செப்டம்பர் முதல் தேதி, சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைவது குறித்து பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் 70 விழுக்காட்டினர் மலேசியாவுடன் இணைவதற்குச் சாதகமாக வாக்களித்தனர்.

ஆனால் மலாயாவின் பாரிசான் தலைவர்கள் வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்