Images
  • ninaivil nindrathu

எஸ்பிளனேட் அரங்கத்துக்கான நிலந்திருத்தும் பணி

11 ஆகஸ்ட் 1996

மரினா பே வட்டாரத்தில் மீட்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டது எஸ்பிளனேட் அரங்கம்.


2,000 இருக்கைகள் கொண்ட அரங்கம், 1,600 இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி மண்டபம் போன்றவற்றை கலை நிலையம் உள்ளடக்கியிருக்கிறது. அது தவிர பற்பல சிறிய படைபரங்கங்களும் அங்கு உள்ளன.

கலைப் படைப்புகள் கொண்ட பகுதி, நூலகம், கடைகள், நவீன உணவகங்கள் என்று இளையர்களைக் கவரும் பல்வேறு அம்சங்கள் நிலையத்தில் அமைக்கப்பட்டன.


நிலையம் சுமார் 513 மில்லியன் வெள்ளி செலவில் கட்டப்பட்டது. அதற்கான நிலந்திருத்தும் பணி 1996ஆம் ஆண்டு இன்றைய தினம் நடைபெற்றது. 

Top