Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இடைவிடாச்சேவை வழங்கத் தொடங்கிய ஒலி 96.8

1936ஆம் ஆண்டு பிரிட்டனின் மலாயா ஒளிபரப்புச் சேவையின் ஓர் அங்கமாக சிங்கப்பூரில் முதன்முதலில் தமிழ் வானொலிச் சேவை தொடக்கம் கண்டது.

வாசிப்புநேரம் -

10 ஆகஸ்ட் 2001

பாடல்கள், இசை, வாழ்வியல் செய்திகள், கதம்ப நிகழ்ச்சிகள், செய்தி, கேளிக்கை நிகழ்ச்சிகள் என்று அனைத்தையும் ஒருசேர வழங்கும் சிங்கப்பூரின் ஒரே வானொலி நிலையம் ஒலி 96.8.

1936ஆம் ஆண்டு பிரிட்டனின் மலாயா ஒளிபரப்புச் சேவையின் ஓர் அங்கமாக சிங்கப்பூரில் முதன்முதலில் தமிழ் வானொலிச் சேவை தொடக்கம் கண்டது.

தினந்தோறும் 4 மணி நேரத்துக்கு மட்டுமே வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நாளடைவில் நிலையத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

1997ஆம் ஆண்டு ஒலி 96.8 என்று பெயரிடப்பட்டது வானொலி நிலையம்.

2001ஆம் ஆண்டு இன்றைய தினம், ஒலி 96.8 இடைவிடா 24 மணி நேரச் சேவையைத் தொடங்கியது.

இன்றுவரை இந்தியச் சமூகத்துக்குப் பயன்மிக்க தகவல்களையும் செய்திகளையும் வழங்கிவருகிறது ஒலி 96.8.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்