Images
  • ninaivil nindrathu

சிங்கப்பூரின் கலப்பின ஆர்க்கிட் மலர்கள் பொறிக்கப்பட்ட நாணயத்தின் இறுதித் தொகுப்பு


13 அக்டோபர் 2001

சிங்கப்பூரில் ஆர்க்கிட் மலர்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

தேசிய மலரான வெண்டா மிஸ் ஜோக்கிம் (Vanda Miss Joaquim) ஆர்க்கிட் வகையைச் சேர்ந்தது.

சிங்கப்பூரின் பல இடங்களில் ஆர்க்கிட் மலர்களைக் காணலாம்.

ஆர்க்கிட் மலர்கள் பொறிக்கப்பட்ட பரிசுப் பொருள்கள் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக இருந்துவருகின்றன.

விதவிதமான நாணயங்களைச் சேகரிப்போரிடையே ஆர்க்கிட் தொகுப்பு நாணயங்கள் பிரபலமாக இருந்தன.

உள்ளூரில் உருவாக்கப்பட்ட இருவகை கலப்பின ஆர்க்கிட் மலர்கள் நாணயங்களில் இடம்பெற்று வந்தன.

சிங்கப்பூர் நாணய வாரியம் 2010ஆம் ஆண்டு இன்றைய தினம், அவ்வகை ஆர்க்கிட் மலர்கள் கொண்ட நாணயங்களின் இறுதித் தொகுப்பை வெளியிட்டது.



 

Top