Images
  • ninaivil nindrathu

தேசியச் சின்னமான ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயம்

சிங்கப்பூரின் பழமையான ஆலயங்களில் ஒன்று சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயம்.

தைப்பூசத் திருவிழாவின்போது பக்தர்கள் காவடிகளை இங்கிருந்து ஏந்திச் செல்வர்.

1885ஆம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது.

ஈஸ்ட் இந்தியா நிறுவனத்திடமிருந்து வாங்கிய நிலத்தில் அமைக்கப்பட்ட ஆலயத்தில் பெரிய குளமும் மண்டபமும் இருந்தன.

பின்னர் 1960களில் பிரபல இந்திய வர்த்தகர் பி கோவிந்தசாமி பிள்ளையின் நிதி ஆதரவுடன் ஆலயம் மேம்பாடு கண்டது.


ஆலயத்தில் திருமண மண்டபமும் சேர்க்கப்பட்டது.

1978ஆம் ஆண்டு இன்றைய தினம், ஆலயம் தேசியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. 

Top