Images
  • ninaivil nindrathu

சிங்கப்பூரில் ஒரு காலத்தில் செயல்பட்டு வந்த திறந்தவெளித் திரையரங்கம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

யுவான் சிங் ரோட்டில் ஒரு காலத்தில் செயல்பட்டு வந்த திறந்தவெளித் திரையரங்கம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

ஆசியாவிலேயே பெரிய திறந்தவெளி திரையரங்கமாகப் பெயர்பெற்ற அதில், சுமார் 900 கார்களை நிறுத்தமுடியும்.

காரில் அமர்ந்தவாரே மக்கள் திரைப்படம் பார்ப்பதற்கான வசதிகள் அங்கு இருந்தன.

56,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்திருந்த திரையரங்கில் சுமார் 300 பேர் அமர்வதற்கான மேற்கூரை வேயப்பட்ட பகுதியும் இருந்தது.

சுமார் 20 அதிகாரிகள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினர்.

1971ஆம் ஆண்டு இன்றைய தினம், திறந்தவெளித் திரையரங்கு அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

எனினும் நாளடைவில் நவீன வசதிகளோடு கடைத்தொகுதிகளில் கட்டப்பட்ட திரையரங்குகளுடன் ஒப்பிடுகையில், ஜூரோங் திறந்தவெளித் திரையரங்கின் செல்வாக்கு குறைந்தது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு 1985ஆம் ஆண்டு அது மூடப்பட்டது. 

Top