Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகத் திரு லீ சியென் லூங் பதவியேற்ற நாள்

சிங்கப்பூரில் 1984ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று டெக் கீ நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் திரு லீ சியென் லூங்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் 1984ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று டெக் கீ நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் திரு லீ சியென் லூங்.

அதற்கு அடுத்த ஆண்டு தற்காப்பு, வர்த்தக, தொழில்துறைக்கான துணையமைச்சராக அவர் பொறுப்பேற்றார்.

1990ஆம் ஆண்டு திரு லீ துணைப்பிரதமரானார். 2001இல் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

திரு லீ, 2004ஆம் ஆண்டு இன்றைய தினம் சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார்.

இஸ்தானாவுக்கு வெளியே, 1400 விருந்தினர்கள் முன்னிலையில் திரு லீயின் பதவிப்பிரமாணச் சடங்கு நடைபெற்றது.

அதில் உரையாற்றிய திரு லீ,
பல இன, சமய, சமுதாயப் பின்னணிகளைக் கொண்ட சிங்கப்பூரர்கள் அனைவருக்குமான பிரதமராய் இருக்கப்போவதாக உறுதி கூறினார்.
இளைய தலைமுறையினர், வசதி குறைந்தோர் ஆகியோரின் தேவைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமரான பிறகு திரு லீ, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதிலும், சிங்கப்பூரின் பொருளியல் போட்டித்தன்மையை மேம்படுத்துவதிலும் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்