Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செல்வந்தர் லீ கோங் சியெனின் நன்கொடையில் நூலகம்

சிங்கப்பூரில் 1953ஆம் ஆண்டு வாழ்ந்த பெரும் செல்வந்தர் லீ கோங் சியென். இலவச நூலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று நினைத்தார்.

வாசிப்புநேரம் -

16 ஆகஸ்ட் 1957

சிங்கப்பூரில் 1953ஆம் ஆண்டு வாழ்ந்த பெரும் செல்வந்தர் லீ கோங் சியென். இலவச நூலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று நினைத்தார்.

அதற்காக 375,000 வெள்ளி நன்கொடையையும் வழங்கினார்.

சிங்கப்பூரின் கலாசாரத்தையும் மொழிகளையும் பிரதிபலிக்கும் வகையில் அந்த நூலகம் அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

மொழி, இனம், சமயம் பாராது அனைவருக்குமான இடமாக விளங்கவிருந்த ராஃபிள்ஸ் தேசிய நூலகத்துக்கான அடிக்கல் நடும் விழா 1957ஆம் ஆண்டு இன்று நடைபெற்றது.

அனைவரும் படிக்கும் இடமாகவும் பல வகையான புத்தகங்கள் கிடைக்கும் ஒரே நிலையமாகவும் நூலகம் திகழ வேண்டும் என்று விரும்பியதாக விழாவில் கலந்துகொண்ட திரு லீ கோங் சியென் கூறினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்