Images
  • ninaivil nindrathu

‘மரணத்துக்குப் பின்னால்’ என்று அழைக்கப்பட்ட சிங்கப்பூரின் பிரபல சுற்றுலாத்தளம்

14 செப்டம்பர் 1970

சிங்கப்பூரில் பயணிகளை அதிகம் ஈர்க்கும் சுற்றுலாத் தளங்களில் ஒன்று செந்தோசா.

தற்போது ஹோட்டல்கள், மீன் காட்சியகம் போன்ற கண்கவர் அம்சங்களைக் கொண்ட செந்தோசா, முன்னொரு காலத்தில் மீன்பிடி கிராமமாக இருந்தது.

அது முன்பு Pulau Belakang Mati அதாவது "மரணத்துக்குப் பின்னால்" என்று அழைக்கப்பட்டது.

பின்னர் அதன் பெயரை மாற்ற 1969இல் போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

அமைதி, நிலைத்தன்மை போன்ற பொருள் கொண்ட 'செந்தோசா' என்ற பெயர் 1970ஆம் ஆண்டு இன்றைய தினம் அதிகாரபூர்வமாகச் சூட்டப்பட்டது.

1971ஆம் ஆண்டு செந்தோசாவைச் சுற்றுலாத் தளமாக உருமாற்றுவதற்கு பதினொன்றரை மில்லியன் வெள்ளி செலவிட அரசாங்கம் முடிவெடுத்தது. 

Top