Images
  • ninaivil nindrathu

சிங்கப்பூரில் மொத்தம் எத்தனை மெர்லயன் சிலைகள் தெரியுமா?

15 செப்டம்பர்

மெர்லயன், சிங்கப்பூரின் சின்னமாகக் கருதப்படுகிறது. 

1964ஆம் ஆண்டு பழங்கதைகளின் அடிப்படையில் உருவானது மெர்லயன். சிங்கத்தைப் போன்ற தலையையும், மீனைப் போன்ற உடலையும் அது கொண்டிருந்தது. சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் பயன்பாட்டுக்காக அது உருவாக்கப்பட்டது.


1972ஆம் ஆண்டு இன்றைய தினம் முதல் மெர்லயன் சிலை மெர்லயன் பூங்காவில் திறந்துவைக்கப்பட்டது.

1997ஆம் ஆண்டு எஸ்பிளனாட் பாலம் கட்டப்பட்டபோது, மெர்லயன் பூங்காவும் விரிவாக்கம் கண்டது.

அந்த மாற்றங்களைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டு இன்றைய தினம் மெர்லயன் சிலை இடமாற்றம் கண்டு, ஒன் ஃபுல்லர்ட்டனில் (One Fullerton) திறக்கப்பட்டது.

அது உட்பட, சிங்கப்பூரில் மொத்தம் 7 மெர்லயன் சிலைகள் உள்ளன.
 

Top