Images
  • ninaivil nindrathu

சிங்கப்பூர் மலேசியாவின் ஓர் அங்கமானது

16 செப்டம்பர் 1963

சிங்கப்பூர் சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் ஈராண்டு மலேசியாவின் ஓர் அங்கமாக இருந்தது.

சிங்கப்பூர், மலாயா, சரவாக், சபா ஆகியவை இணைந்து ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டன.
மத்திய அரசாங்கத்தில் சிங்கப்பூரின் பிரதிநிதித்துவம், பொருளியலுக்குச் சிங்கப்பூரர்களின் பங்களிப்பு போன்ற அம்சங்கள் குறித்து அப்போதைய பிரதமர் திரு லீ குவான் இயூவும் மலாயாவின் பிரதமர் திரு துங்கு அப்துல் ரஹ்மானும் சுமார் ஒரு வாரத்துக்குக் கலந்தாலோசித்தனர்.

லண்டனில் நடந்த சந்திப்பில் அனைத்து அம்சங்கள் குறித்தும் பேசிய பிறகு உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது.

1963ஆம் ஆண்டு இன்றைய தினம் சிங்கப்பூர் மலேசியாவின் ஓர் அங்கமாவதாய் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

Top