Images
  • ninaivil nindrathu

குளுகுளு சூழலில் அழகிய மலர்களைக் கண்டு ரசிக்க...

சிங்கப்பூரில் அழகிய மலர்கள் பல பூத்துக்குலுங்கும் இடங்களில் ஒன்று கரையோரப் பூந்தோட்டம்.

குளிர்சாதன வசதியோடு பொதுமக்கள் மலர்களின் அழகை அங்கு கண்டு ரசிக்கலாம்.

மொத்தம் 101 ஹெக்டர் பரப்பளவில் மூன்று தோட்டங்கள் அங்கு உள்ளன.

2007ஆம் ஆண்டு இன்றைய தினம் முதல் தோட்டத்துக்கான நிலந்திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பருவநிலை மாற்றத்தைக் கருத்தில்கொண்டு, கரையோரப் பூந்தோட்டம், எரிசக்தி, தண்ணீர் ஆகியவற்றில் நீடித்திருக்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது.

பண்டிகைக் காலங்களில் பூந்தோட்டத்தில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.  

Top