Images
  • ninaivil nindrathu

ஒரு காலத்தில் அஞ்சல் அலுவலகம்...இன்று அழகான ஹோட்டல்!

சிங்கப்பூரின் பொன்விழாக் கொண்டாட்டங்கள் மூவாண்டுக்கு முன்னர் மிகக் கோலாகலமாக நடைபெற்றன.

மக்களின் பல்வேறு நினைவுகளைக் கொண்டாடும் ஆண்டாகவும் அது அமைந்தது.

நாட்டின் வளர்ச்சியைக் குறிக்கும் பல்வேறு அம்சங்கள் நினைவுகூரப்பட்டன.

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் சிறப்பு அங்கீகாரம் பெற்றன.

அவற்றுள் ஒன்று ஃபுல்லர்ட்டன் ஹோட்டல்.

சிங்கப்பூர் ஆற்றுக்கு அருகே அமைந்துள்ள ஃபுல்லர்ட்டன் ஹோட்டல் ஒரு காலத்தில் அஞ்சல் அலுவலகமாகச் செயல்பட்டது.

அரசாங்கத் துறைகள் சில, அவற்றின் அலுவலகங்களை அந்தக் கட்டடத்தில் கொண்டிருந்தன. பல முன்னோடித் தலைவர்கள் அவர்களின் பணிகளை அங்குதான் முதலில் தொடங்கினர்.

1996ஆம் ஆண்டு கட்டடம் ஹோட்டலாகச் செயல்படத் தொடங்கியது.

2015ஆம் ஆண்டு இன்றைய தினம் ஃபுல்லர்ட்டன் ஹோட்டல் சிங்கப்பூரின் 71ஆவது நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. 

Top