Images
  • ninaivil nindrathu

சிங்கப்பூரின் முதல் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்ற தினம்

08 டிசம்பர் 1965

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து சட்டமன்றம், நாடாளுமன்றம் எனப் பெயர்மாற்றம் கண்டது.

51 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் 1965ஆம் ஆண்டு இன்றைய தினம் அதன் முதல் கூட்டத்தை நடத்தியது.

முதல் நாடாளுமன்ற நாயகர் பொறுப்பை ஏற்றார் வழக்குரைஞரான திரு A.P ராஜா.

மன்றத்தில் சிங்கப்பூர் சுதந்திரச் சட்டம், அரசமைப்புச் சட்டம் ஆகியவை முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஏற்கனவே இருந்த சட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுவதும் தேவையான மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டது.

சிங்கப்பூர் ராணுவத்தை அமைத்தல், வீடமைப்புத் திட்டம், அரசாங்கத்தின் பல இனக் கொள்கை போன்ற மசோதாக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சிங்கப்பூர் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைகளை அப்போதைய வெளியுறவு அமைச்சர் திரு S ராஜரத்னம் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்வைத்தார்.
 

Top