Images
  • mha
    (படம்: TODAY)

"சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான மிரட்டல் குறித்த நம்பகமான வேவுத் தகவல் ஏதும் இல்லை"

சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான மிரட்டல் குறித்த நம்பகமான வேவுத் தகவல் ஏதும் இல்லை என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

உத்தேசப் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனச் சில நாள்களுக்கு முன்னர், ஜப்பானிய வெளியுறவு அமைச்சு தென்கிழக்காசிய நாடுகளின் தூதரங்கள்மூலம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, அது அவ்வாறு கூறியது.

வழிப்பாட்டுத் தலங்கள் அல்லது கூட்ட நெரிசல் மிக்க இடங்களில், தற்கொலைத் தாக்குதல்கள் போன்றவை நடத்தப்படுவதற்கான அபாயம் அதிகம் இருப்பதாகத் தகவல் பெற்றிருப்பதாய், ஜப்பான் அதன் குடிமக்களிடம் தெரிவித்தது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஃபிலிப்பின்ஸ், தாய்லந்து, மியன்மார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஜப்பானியக் குடிமக்களுக்கு அது பற்றிய ஆலோசனை அறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் அது பற்றி, குறிப்பிட்ட வேவுத் தகவல் ஏதும் இல்லை என ஜப்பானிய உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் கூறியது.

இருப்பினும், தொடர்ந்து விழிப்புநிலையில் இருக்குமாறும், சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் பற்றி புகார் அளிக்குமாறும் சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Top