Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொருள், சேவை வரியின்றி பொருள்களை வாங்க ஒரு நாள் வாய்ப்பு

மாபெரும் சிங்கப்பூர் விற்பனை புதுப் பெயருடன் இவ்வாண்டு வரவுள்ளது. 'GSS: Experience Singapore' என்று பெயர் மாற்றங்காணவுள்ள மாபெரும் சிங்கப்பூர் விற்பனை, இம்மாதம் 21ஆம் தேதி தொடங்கும். அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை அது நீடிக்கும்.

வாசிப்புநேரம் -
பொருள், சேவை வரியின்றி பொருள்களை வாங்க ஒரு நாள் வாய்ப்பு

படம்: SRA

மாபெரும் சிங்கப்பூர் விற்பனை புதுப் பெயருடன் இவ்வாண்டு வரவுள்ளது. 'GSS: Experience Singapore' என்று பெயர் மாற்றங்காணவுள்ள மாபெரும் சிங்கப்பூர் விற்பனை, இம்மாதம் 21ஆம் தேதி தொடங்கும். அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை அது நீடிக்கும்.

அடுத்த மாதம் 7ஆம் தேதி, வாடிக்கையாளர்கள் பொருள் சேவை வரி செலுத்தாமல் பொருள்களை வாங்க முடியும். அதில் பங்கேற்கும் கடைகள் வாடிக்கையாளர்களிடமிருந்து 7 விழுக்காடு பொருள் சேவை வரியை வசூலிக்க மாட்டா. பங்கேற்கும் கடைகளின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

1994ஆம் ஆண்டு மாபெரும் சிங்கப்பூர் விற்பனை தொடங்கியது. ஆண்டுதோறும் நடைபெறும் அதில், வாடிக்கையாளர்கள் கூடுதலான விலைக்கழிவுகள், சலுகைகள் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்