Images
  • haze
    (படம்: TODAY)

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் புகைமூட்டத்தை ஏற்படுத்தும் எந்த அறிகுறியும் தென்படவில்லை : தேசியச் சுற்றுப்புற அமைப்பு

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் எல்லைத் தாண்டிய புகைமூட்டத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியுள்ளது.

முன்னதாக, அந்த வட்டாரத்தில் புகை வாடை இருந்ததாக சிலர் தெரிவித்திருந்தனர்.

உள்நாட்டில் எங்கோ தீப்பற்றியதாகவோ, தொழிற்சாலைகளில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்ததாகவோ கண்டறியப்படவில்லை என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியது.

கிழக்கு வட்டாரத்திற்கான 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அதிகாலை 3 மணி முதல் மிதமான அளவிலேயே இருந்தது.

Top