Images
  • strawberry
    படம்: Daniel LEAL-OLIVAS / AFP

ஊசிகள் கொண்ட ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யப்படவில்லை

தையல் ஊசிகள் ஒளித்து வைக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி பழங்கள் ஏதும் சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யப்படவில்லை. வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் அதனைத் தெரிவித்தது.

தான் நடத்திய சோதனையில், பாதிக்கப்பட்ட பழங்கள் இங்கே இறக்குமதி செய்யப்படவில்லை என்பதை ஆணையம் உறுதிப்படுத்தியது.

சேனல் நியூஸ்ஏஷியா கேட்ட கேள்விக்கு பதிலளித்து ஆணையம் அதனைத் தெரிவித்தது.

ஆஸ்திரேலியாவில், ஆறு விற்பனைச் சின்னங்களின்கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்ட்ராபெர்ரிப் பழங்களில் ஊசிகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

அவை சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யப்பட்டனவா என்பது குறித்து இங்குள்ளோருக்குச் சந்தேகம் எழுந்தது.


Top