Images
  • Ndp fun pack
    கோப்புப் படம்

தேசிய தின அன்பளிப்புப் பைகள் வேண்டாம் என்று சுமார் 40,000 பேர் கையெழுத்திட்டு மனு

தேசிய தினத்தை ஒட்டி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இவ்வாண்டு அன்பளிப்புப் பொருள்கள் அடங்கிய பை வழங்கப்படுமென அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்தப் பைகளைப் பெற விருப்பமில்லை என்று கூறி, சுமார் 40,000 பேர் இணைய மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

அன்பளிப்புப் பைகள், சிங்கப்பூரர்கள் எதிர்நோக்கும் கடினமான காலத்தில் மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஒன்று.

இருந்தாலும், அந்தப் பைகளைத் தயார் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் வளங்கள் மற்ற நற்செயல்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று மனு இடம்பெற்றுள்ள change.org பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்பளிப்புப் பைகளில், ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதையும் மனுவைத் தொடங்கிய கௌஷிக் இளங்கோ சுட்டியிருந்தார்.

அதற்கு பதிலாக, அன்பளிப்புப் பொருள்களுக்கான வளங்களை, தேவைப்படும் நபர்களுக்கு வழங்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்பளிப்புப் பைகளைப் பெற விரும்பாதவர்களுக்கு, அதிலிருந்து விலகிக்கொள்ளும் வசதியை அமைத்துத் தருமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேற்று தொடங்கப்பட்ட மனு, 50,000 கையெழுத்துகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளது.  

Top