Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிரடித் திட்டம் தளர்த்தப்படும்போது, வேலையிடங்களில் ஒன்றுகூடவேண்டாம்: மனிதவள அமைச்சு

அதிரடித் திட்டம் தளர்த்தப்பட்டவுடன், வேலை இடங்களில் ஊழியர்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று மனிதவள அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அதிரடித் திட்டம் தளர்த்தப்படும்போது, வேலையிடங்களில் ஒன்றுகூடவேண்டாம்: மனிதவள அமைச்சு

படம்: AP/Ee Ming Toh

அதிரடித் திட்டம் தளர்த்தப்பட்டவுடன், வேலை இடங்களில் ஊழியர்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று மனிதவள அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அதிரடித் திட்டம் முதல் கட்டமாக அடுத்த மாதம் 2ஆம் தேதி தளர்த்தப்படும்.

அவ்வேளையில், வேலையிட ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பதன் மூலம், சமூக அளவிலான COVID-19 நோய்ப்பரவல் சம்பவங்களைத் தடுக்கலாம் என்று அமைச்சு குறிப்பிட்டது.

ஊழியர்கள் உணவு இடைவேளையின்போது தனித்தனியாக அமர்ந்து உணவு உட்கொள்வது சிறந்தது என்று அமைச்சின் அறிக்கை கூறியது.

எல்லா ஊழியர்களும் SafeEntry தளத்தில் தங்களுடைய வருகையைத் தொடர்ந்து பதிவு செய்யவேண்டும்.

அதிரடித் திட்டம் தளர்த்தப்படும் முதல் இரண்டு கட்டங்களில் முதலாளிகள் அவர்களது ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிப்பது முக்கியம் என்றும் கூறப்பட்டது.

அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டுமே ஊழியர்கள் அலுவலகங்களுக்குச் செல்லவேண்டும் என்பதையும் அமைச்சு வலியுறுத்தியது.

விதிமுறைகளைப் பின்பற்றாத வேலையிடங்கள் மூடப்படலாம் என்றும் அமைச்சு எச்சரிக்கை விடுத்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்